விருச்சகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 15.2.2026 முதல் 21.2.2026 வரை

Published On 2026-02-15 11:24 IST   |   Update On 2026-02-15 11:24:00 IST

விருச்சிகம்

இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறும் வாரம். ராசிக்கு நான்கில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. மனதில் நல்ல விதமான புதிய சிந்தனைகள் உருவாகும். அன்றாட செயல்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். எதிர்பார்த்த வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் தகுதிக்கேற்ற பணி கிடைக்கும். தொழிலில் வெற்றி நடைபோடுவீர்கள். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் சாதகமாகும்.

அடமானத்தில் இருந்த வீட்டை மீட்க மகள், மகனின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புரிந்து படிப்பார்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் செய்ய நேரும். சிலரின் நான்கு சக்கர வாகனம் வாங்கும் முயற்சி பலிதமாகும். பூமி, மனை, வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுப செலவு செய்து மகிழ்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அமாவாசை அன்று விரதம் இருந்து வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News