விருச்சகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை

Published On 2025-12-07 10:16 IST   |   Update On 2025-12-07 10:16:00 IST

7.12.2025 முதல் 13.12.2025 வரை

விருச்சிகம்

நம்பிக்கைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்பஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு குரு மற்றும் சனி பார்வை கிடைப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு, கடும் விரோத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உங்களின் செயல்பாடுகள் வெற்றியில் முடியும்.

நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய அறிகுறிகள் தென்படும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறையும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி அல்லது வராக்கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். தந்தையால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். பூர்வீகச் சொத்துக்கள் முறையாக பிரிக்கப்படும்.

புதிய தொழில் முதலீடுகளை மனைவி பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி பெறும். 7.12.2025 அன்று இரவு 10.38 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் இனம்புரியாத கவலை குழப்பம் உண்டாகலாம். வேலையாட்களால், உடன் பணிபுரி பவர்களால் மன சங்கடம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவகிரக செவ்வாயை வழிபடலாம்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News