வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை
21.12.2025 முதல் 27.12.2025 வரை
விருச்சிகம்
விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய காலம். ராசியில் 8,11-ம் அதிபதியான புதன் இருக்கிறார். புதிய மறைமுக சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும். தொழில், உத்தியோக நிமித்த மாக குறுகிய காலத்திற்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வரலாம். மாணவர்களுக்கு விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும்.உடல் ஆரோக்கித்தில் கவனம் தேவை.
நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை பகைக்காமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள்.
உடன் இருப்பவர்களே குழி பறிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் என்பதால் யாரையும் நம்பக்கூடாது. பெண்கள் விலை உயர்ந்த நகை மற்றும் பொருட்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406