விருச்சகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை

Published On 2025-11-02 10:33 IST   |   Update On 2025-11-02 10:33:00 IST

2.11.2025 முதல் 8.11.2025 வரை

விருச்சிகம்

கற்பனைகள், கனவுகள் நனவாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 8,11ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றிருக்கிறார். பணபர ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். வீடு, மனை, திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். 8.11.2025 அன்று பகல் 11.14 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அக்கம் பக்கத்தினரின் தீய பார்வையால் ஆரோக்கியம் குறையும். தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News