வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
விருச்சிகம்
தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய், புதனுக்கு குரு பார்வை உள்ளது. சூரியனை குரு பார்ப்பதால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்மபலம் பெருகும். பூர்வீக குலத் தொழிலில் ஏற்றமான பலன் உண்டு.
வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணி அதிகரிக்கும். புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். சிலர் வேலையை மாற்றலாம். வீடு கட்டும் பணி துரிதமாகும்.
சிலர் வீடு, மனை அல்லது புதிய வாகனம் வாங்கலாம். குடும்ப சுப விசேஷங்களுக்கு எதிர்பார்த்த தொகை ஓரிரு நாட்களில் கிடைக்கும். பெண்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். அழகு ஆடம்பர துணி நகைகள் கிடைக்கும். குல இஷ்ட தெய்வ வழிபாடு நன்மைகளை மிகைப்படுத்தும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406