வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை
22.6.2025 முதல் 28.6.2025 வரை
எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார்.பொருளாதார தேவைகள் நிறைவு பெறும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சினைகள் முடிவிற்கு வரும். தந்தையுடன் ஏற்பட்ட பிணக்குகள் விலகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும்.
அடமானத்தில் இருந்த வீடு, வாகனம், நிலபுலன், நகை அனைத்தும் மீண்டு வரும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் குடும்ப பாரத்தை சுமக்க நேரும். திருமணத் தடை அகலும். கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ,மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள்.
24.6.2025 இரவு 11.45 முதல் 27.6.2025 அன்று காலை 1.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். அமாவாசையன்று வயது முதிர்ந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406