விருச்சகம் - வார பலன்கள்
வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை
13.7.2025 முதல் 19.7.2025 வரை
சுபசெய்திகளால் மனம் மகிழும் வாரம். ராசிக்கு செவ்வாய் மற்றும் சுக்கிரன் பார்வை உள்ளது. தற்போது ஓய்வில்லாமல் உழைக்கக் கூடிய நேரம். நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். அரசு வேலைக்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கிய குறைபாட்டை சரி செய்ய புதிய வைத்திய முறையை நாடுவீர்கள்.நிச்சயித்த திருமணத்தை தள்ளிப்போடாமல் ஆவணியில் நடத்துவது நல்லது. மாமனார் மூலம் பூமி வயல், தோட்டம் கிடைக்கும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். தந்தை உயில் எழுதுவதில் சர்ச்சைகள் உண்டாகி பாகப்பிரிவினை இழுபறியாகும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும்.
ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளும் வெற்றியாக மாறும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் இருந்து வந்த தடைகள் நீங்கும். புத்திரர்களால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தினமும் கந்தர் அநுபூதி கேட்கவும் அல்லது படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406