வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
எதையும் தாங்கும் மனப்பக்குவம் உருவாகும் வாரம். ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதி சூரியனின் சம சப்தம பார்வை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே காணப்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும்.
ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம்.
கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். வைத்தியத்தில் ஆரோக்கியம் சீராகும். தான, தர்மங்கள் செய்வீர்கள். சித்ரா பவுர்ணமியன்று சித்ர குப்தரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406