விருச்சகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை

Published On 2025-06-08 09:46 IST   |   Update On 2025-06-08 09:47:00 IST

08.06.2025 முதல் 14.06.2025 வரை

வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். பிறரை வசீகரிக்கும் ஆற்றல் உண்டாகும். கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழ முடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை இன்மை, பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை விலகும். திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் உங்கள் புகழ் உயரும்.

புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். இதுவரை குல தெய்வம் எதுவென்று தெரியாதவரகளுக்கு குலதெய்வ இருப்பிடம் தெரியும் வாய்ப்பு உள்ளது. வாடகை வருமானம் தரக் கூடிய அசையும், அசையாச் சொத்துக்கள் சேர்க்கை மிகுதியாக இருக்கும். தாய், தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

தொழில் உளர்ச்சி கூடும். சிலர் அதிக முதலீடு செய்யும் புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் விரிவாக்கம் அல்லது குடும்ப சுப நிகழ்விற்காக கடன் பெறலாம். தொழிலுக்கு தேவையான திறமையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டில் வாழ்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். அங்காரகன் வழிபாடு இழந்ததை மீட்டுத் தரும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News