தனுசு - வார பலன்கள்

வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை

Published On 2025-08-31 11:00 IST   |   Update On 2025-08-31 11:01:00 IST

31.8.2025 முதல் 6.9.2025 வரை

பாக்கிய பலன்கள் அதிகரிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் புதன் கேது சேர்க்கை ஏற்படுகிறது. 7.9.2025 அன்று சந்திர கிரகணம் ஏற்படும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றும்.உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கிரக நிலைகள் சற்று சாதகமற்று இருந்தாலும் ஒரு கதவை அடைத்தாலும் மறுகதவு திறந்து விடுபவர்கள் தான் நவகிர கங்கள். எனவே நம்பிக்கை மிக முக்கியம். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். சுய ஜாதக ரீதியாக கடுமையான பித்ரு, மாத்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பரிகார சாந்தி பூஜைகள் செய்தால் ஜாதக ரீதியான பாதிப்புகள் அகலும்.

தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும். திருமணம் குழந்தை பேறு தொழில் உத்தியோ கரீதியான இடர்கள் அகலும்.பஞ்ச கவ்யம் எனும் பசுஞ்சாணம், கோமியம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து அபிஷேக ஆராதனை செய்து நந்தி. சிவனை பூஜித்தால் தடைப்பட்ட அனைத்து இன்பங்களும் தேடி வரும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News