வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
தனுசு
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார். எதிர்பார்த்த செயல்கள் நன்மையில் முடியும். தடைபட்ட சில செயல்கள் தாமாக நடக்கும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரியில் ஏற்பட்ட மனசங்கடங்கள் அகலும்.
மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினர் ஏற்றம் பெறுவர். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.
வீட்டில் சிறுசிறு சுபமங்கல நிகழ்வுகள் நடக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டாகும். கந்த சஷ்டி அன்று 36 முறை கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406