தனுசு - வார பலன்கள்

வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை

Published On 2025-09-14 16:13 IST   |   Update On 2025-09-14 16:13:00 IST

14.9.2025 முதல் 20.9.2025 வரை

புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். 7,10-ம் அதிபதி புதன் உச்சம் பெறுகிறார். மன ரீதியான சங்கடங்கள் விலகும். ஆடம்பர, அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும். தொழிலில் நல்ல விருத்தி உண்டாகும். அனைத்து தொழில் சார்ந்தோரும் ஏதாவது ஒரு வகையில் லாபமும் மன நிறைவும் பெறுவர். சிலருக்கு அரசின் மானியம் கிடைக்கும்.

சிலர் புதிய தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது. கடன், நோய் எதிரிகளிடமிருந்து விடுபடுவீர்கள். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அகன்று திருமணம் நடக்கும். மறுமணத்திற்கு வரன் பார்க்க ஏற்ற நேரம். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். வீடு, வாகனம் மற்றும் சுப நிகழ்விற்காக விண்ணப்பித்த கடன் கிடைக்கும்.

வாழ்க்கைத் துணையின் நலனில் அதிக அக்கறை வேண்டும். மறைமுக தொந்தரவு கொடுத்தவர்கள் பலம் இழப்பார்கள். 17.9.2025 அன்று காலை 12.28 முதல் 19.9.2025 அன்று காலை 7.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மகாளய பட்ச காலத்தில் ஆன்மீக குருமார்கள் புரோகிதர்கள் ஆசிரியர்கள் போன்ற வர்களிடம் நல்லாசிகள் பெற குரு சாபம் விலகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News