வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
தனுசு
செல்வாக்கு உயரும் வாரம். ராசிக்கு தன ஸ்தான அதிபதி சனியின் பார்வை உள்ளது. வெகு சில நாட்களில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கைவிட்டுப் போனது எல்லாம் தேடி வரும். பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம்.
உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம். சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும் அலைச்சல், அசதி மன சஞ்சலம், பய உணர்வு மிகுதியாக இருக்கும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். கார்த்திகை மாதம் சிவனை வழிபட அனைத்து விதமான சுப பலன்களும் கூடி வரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406