வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை
28.12.2025 முதல் 3.1.2026 வரை
தனுசு
உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் வாரம். ராசியில் உள்ள சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கைக்கு சனி, குரு பார்வை உள்ளது. தனுசு ராசியினர் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழும் அமைப்பு உண்டாகும். செயற்கரிய செயல்களை செய்து புகழ், பாராட்டுகளை அடைவீர்கள். புத்திர தோஷம் விலகி குழந்தை பேறு கிடைக்கும்.
உங்கள் திறமைகள் வெளிப்படும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். வீடு கட்ட, வாகனம் வாங்க உகந்த நேரம். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். பங்காளிகள் பிரச்சினை, கோர்ட்டு, கேஸ், வாய்தாக்கள் என அலைந்த நிலை மறையும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பூர்வீகம் தொடர் பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். உடன் பிறந்தே கொன்ற வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு பச்சைக் கற்பூரம் அபிஷேகம் செய்து வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406