தனுசு - வார பலன்கள்

வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை

Published On 2025-12-07 10:17 IST   |   Update On 2025-12-07 10:17:00 IST

7.12.2025 முதல் 13.12.2025 வரை

தனுசு

திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசியில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. தொழில் வளர்ச்சியில் நிலவிய இடையூறுகள் அகலும். குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வருமானம் வரத்துவங்கும். தொழில் உத்தியோக ரீதியான சில நேர்மறை சம்பவம் ஏற்படலாம்.

புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. சிலருக்கு வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். காதல் திருமணம் கைகூடும். இந்த வாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவதால் வெற்றி நிச்சயம் உண்டாகும். தடைபட்ட திருமணம் நடந்து முடியும்.

பொறுப்பு மிக்க பதவிகள் தேடி வரும். ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். 7.12.2025 அன்று இரவு 10.38 முதல் 10.12.2025 அன்று அதிகாலை 2.23 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் மாமனார் அல்லது மைத்துனர்கள் வழியில் மனக்கசப்புகள் ஏற்படலாம். உறவுகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பான பலனை அடைய முடியும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News