வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை
11.1.2026 முதல் 17.1.2026 வரை
தனுசு
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் 7,10ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து எண்ணிய பலனை அடைவீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தன்நிறைவோடு வாழ முடியும். பொருளாதார நெருக்கடி, கடன் படிப்படியாக குறையும். எதிர்பாராத தனவரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு. உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும்.
சுபகாரியம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். அடமானம் வைத்த பொருளை சொத்துக்களை மீட்பீர்கள். எப்பொழுதோ வாங்கி வைத்த பங்குகளின் மதிப்பு உயரும். அர்த்தாஷ்டமச் சனி நடந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில் அனுகூலமான சூழல் காணப்படும். தம்பதிகளிடம் புரிதல் உண்டாகும். திருமணத்தடை அகலும். மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து நவகிரக குரு பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406