வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை
23.11.2025 முதல் 29.11.2025 வரை
தனுசு
நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளா தாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் நிலவும்.பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.மனமகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் நடக்கும்.
ஆடம்பர விருந்து உபசரணைகளில் கலந்து கொள்ளக்கூடிய அமைப்பு உள்ளது. எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டு எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.மதிப்பு மிகுந்த கவுரவப் பதவிகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சிரத்தையுடன் செயல்படுவீர்கள்.
இது அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் தொழில், கல்விக்காக இடம் பெயரலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியாக பணிபுரிய முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைகளுக்கு உதவியாக இருக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406