வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை
28.9.2025 முதல் 4.10.2025 வரை
எதிர்மறை பலன்கள் சீராகும் வாரம். ராசிக்கு குரு சனி பார்வை உள்ளது. யாரை நம்புவது யாரை நம்ப கூடாது என்ற பாடத்தை குருவும் சனியும் கற்பிப்பார்கள். நோய் விபத்து கண்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். மனதில் நிலவிய குழப்பங்கள் விலகும். சூழ்நிலை கைதியாக வாழ்ந்த நிலை மாறும். தொழிலாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து அதனை தீர்க்க முயல்வது நிறுவனத்தை வளரச் செய்யும்.
குடும்ப ஸ்தானத்திற்கு செவ்வாயின் பார்வை இருப்பதால் முன் கோபத்தைக் குறைந்து எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். இதுவரை தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். கணவர் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தாய் வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும்.
வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்து சர்ச்சைகள் விலகும். குழந்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். வீடு, வாகனம் வாங்குதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். புரட்டாசி மாதத்தில் மகா விஷ்ணுவை வழிபட பாக்கிய பலம் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406