வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
புதிய முதலீடுகள் தவிர்க்க வேண்டிய காலம். ராசி அதிபதி குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு சென்று உச்சம் பெறப்போகிறார். கடன், வம்பு, வழக்கு, நோய் தாக்கம், உத்தியோ கத்தில் இடையூறு, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகலாம். விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும். வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும்.
சிலருக்கு காது வலி, ஞாபக மறதி போன்ற அசவுகரியங்கள் தலை தூக்கும். சிலர் முக்தியை போதிக்கும் ஆன்மீக இயக்கம், சங்கங்களில் சேர்ந்து பயனடைவார்கள். 2ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சாத்தியமற்ற விசயத்திற்கு யாருக்கும் வாக்கு கொடுத்து வம்பில் மாட்டக் கூடாது. பேச்சை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் நிதானமாக சிந்தித்து பேச வேண்டும்.
பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்ய நேரும். வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். செயற்கை கருத்தரிப்பிற்கான முயற்சியை சிறிது காலம் ஒத்திவைக்கவும். தினமும் மாலையில் ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட இன்னல்கள் விலகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406