மீனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை

Published On 2025-07-06 09:13 IST   |   Update On 2025-07-06 09:13:00 IST

6.7.2025 முதல் 12.7.2025 வரை

சுமாரான வாரம். ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் 13.7.2025 அன்று வக்ர கதியில் செல்கிறார். ஜென்ம சனியின் தாக்கம் வெகுவாக குறையும். அன்றாட பணியில் உள்ள சில சிக்கலான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலும் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும். தீய நட்பால் தடம் மாறிப் போனவர்கள் நல்வழிப்படுவார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் சில விஷயத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்வது உங்களுக்கு சிக்கலைத் தரலாம். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது நல்லது.

திருமண முயற்சியில் திருப்பம் உண்டாகும். நோய் தாக்கம் குறையும்.தாயின் அன்பும், அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். உயர்கல்விக்கு விரும்பிய கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். எவர் தடுத்தாலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். பவுர்ணமி அன்று சத்யநாராயணரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News