மீனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை

Published On 2025-11-23 10:31 IST   |   Update On 2025-11-23 10:32:00 IST

23.11.2025 முதல் 29.11.2025 வரை

மீனம்

தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும் வாரம். ராசிக்கு உச்ச குருவின் வக்கிர பார்வை உள்ளது. ராசி அதிபதி குரு தனது ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் காலமும், நேரமும் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் ஜென்மச் சனியால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. வீடு, மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும்.

விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும் என்ற தாரக மந்திரத்தை மனதில் குறிக்கோளாக வைத்து செயல்படுவீர்கள். சில நன்மைகளும், மாற்றங்களும் நடக்கும். தகப்பனார் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலைமாறும்.

வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவது புத்திசாலித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும். ஆண் வாரிசு உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கை துணை மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. தினமும் குரு கவசம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News