வார ராசிபலன் 01.2.2026 முதல் 07.2.2026 வரை
மீனம்
கொள்கை பிடிப்போடு செயல்பட வேண்டிய வாரம். ஜென்ம ராசியில் நிற்கும் சனி பகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு விதமான புண்ணிய பலன்கள் தேடி வரும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை இந்த ஜென்ம சனியின் காலத்தில் உணர்ந்து இருப்பீர்கள். ஜென்மச் சனியை மீறிய சுப பலன்கள் உண்டாகும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் வந்து நிற்கும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். உடன் பிறந்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பேசி முறையாக பாகப் பிரிவினைகளை முடிப்பீர்கள்.கவுரவப் பதவிகள் கிடைக்கும். தந்தை மகன் ஒற்றுமை பலப்படும். திருமணத் தடை அகலும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 7.2.2026 அன்று பகல் 1.22 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்கள் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். தேனும் திணையும் படைத்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406