வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை
21.12.2025 முதல் 27.12.2025 வரை
மீனம்
மகிழ்ச்சியான நிம்மதியான வாரம். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சூரியன், செவ்வாய், சுக்ரனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. அனைத்து விதமான செயல்களிலும் அனுகூலமான பலன் உண்டாகும்.
இளைய சகோதர, சகோதரி மூலம் நிலவிய குழப் பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குலத் தொழில் உள்ளவர்களுக்கு தொழில் வளர்ச்சி பல மடங்காகும். பணவரத்து திருப்தி தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அதே வேளையில் சுபச்செலவுகளும் அதிகமாகும்.
மறு திருமணத்தால் ஏற்பட்ட மனச் சங்கடம் நீங்கும். நோய் தொல்லை குறையும். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்வில் நாட்டம் அதிகரிக்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாகப் பொழுதை கழிப்பார்கள். மகான்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406