மீனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை

Published On 2025-12-14 11:07 IST   |   Update On 2025-12-14 11:07:00 IST

14.12.2025 முதல் 20.12.2025 வரை

மீனம்

பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும் வாரம். ஜென்ம சனியால் பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சமூக அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திக் கூர்மை அதிகரிக்கும்.

எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக்கும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும்.

14.12.2025 அன்று இரவு 9.41 மணி முதல் 17.12.2025 அன்று காலை 10.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிகமான அலைச்சல், உறவுகள் மீது அதிருப்தி, பழகிய வட்டாரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். எதிலும் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தினமும் நவகிரக காயத்ரி மந்திரம் படிக்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News