வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை
28.12.2025 முதல் 3.1.2026 வரை
மீனம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. பிறர் அறியா நுட்பங்களை அறிந்து தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உருவாகும். பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும். சுகமான, சொகுசான ஆடம்பர பங்களா, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. இடப்பெயர்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளது.
வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் துவங்கலாம். உடன் பிறந்த சகோதரர் அல்லது உங்களின் உதவியைப் பெற்றவர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஜாதக தசா புத்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் பிரச்சினைகளும் விலகும்.
சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும். முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதமிருந்து நடராஜருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406