மீனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

Published On 2025-11-30 10:35 IST   |   Update On 2025-11-30 10:35:00 IST

30.11.2025 முதல் 6.12.2025 வரை

மீனம்

தடை தாமதங்கள் அகலும் வாரம். ஜென்ம ராசியில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவுகள் வந்து இணைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும்.

வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும். சிலருக்கு அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும்.

தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஓய்வு, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் என இந்த வாரத்தை மகிழ்ச்சியாக கடப்பீர்கள். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News