மீனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை

Published On 2025-10-05 10:50 IST   |   Update On 2025-10-05 10:50:00 IST

5.10.2025 முதல் 11.10.2025 வரை

வெற்றி மேல் வெற்றி தேடிவரும் அற்புதமான வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு உச்சம் பெற்று ராசியில் உள்ள சனிபகவானை பார்க்க போகிறார். இது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். இதனால் இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும்.

எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலைமறையும். தடை தாமதங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிட்டும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும்.

குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சீராகும். ஸ்ரீ வல்லப கணபதியை வழிபட வளமான வாழ்க்கை உண்டாகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News