மீனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை

Published On 2025-09-28 10:41 IST   |   Update On 2025-09-28 10:41:00 IST

28.9.2025 முதல் 4.10.2025 வரை

சகாயங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி குரு 4ம்மிடத்தில் நிற்பதால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமடையும். வாகனம், வயல்வெளி, தோட்டம் வாங்கும் யோகம் உண்டு. தாய் வழிச் சொத்துக்கள் பணம் நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தாய் வழி உறவுகளின் அன்பு. அனுசரனை மகிழ்ச்சியை கூட்டும். சுகபோக வாழ்க்கை உண்டாகும்.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினர் தொழிலில் சாதனை படைப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பரிபூரண குல தெய்வ அருள் உண்டாகும். சமுதாய அந்தஸ்து அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு. பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும்.

மகன், மகளின் முதல் மாதச் சம்பளம் உங்களை ஆனந்தப்படுத்தும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். ஆன்லைன் மோகத்தில் பணத்தை இழக்க வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். புரட்டாசி மாதம் மகா விஷ்ணுவை வழிபடுவதால் குடும்ப சங்கடங்கள் குறையும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News