மீனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை

Published On 2025-11-16 10:28 IST   |   Update On 2025-11-16 10:29:00 IST

16.11.2025 முதல் 22.11.2025 வரை

மீனம்

தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குருபகவான் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியும் கூடும். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். திருமணம், குழந்தை பேறு, பேரன், பேத்தி, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும்.

தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தாய்வழிச் சொத்து தேடி வரும். தேவையற்ற கற்பனை, பயங்கள் அகலும். மன சஞ்சலமின்றி நிம்மதியாக தூங்குவீர்கள். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள்.

17.11.2025 அன்று மதியம் 3.35 முதல் 20.11.2025 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாது போன்ற மன வருத்தம், சங்கடங்கள் நீடிக்கும். வேலையில் மந்தத்தன்மை நிலவும். சிவபுராணம் படித்து சிவ, சக்தியை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News