வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
ஆன்மீக வழிபாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டிய வாரம். ராசியில் 4 கிரக சேர்க்கை உள்ளதால் சில நல்லதும், சில கெட்டதும் சேர்ந்தே நடக்கும். அதிக அலைச்சலுக்கு பிறகு தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சம்பந்திகள் கருத்து வேறுபாட்டை தவிர்ப்பது நல்லது.
நண்பர்களிடம், கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன்கள் அமையும். ஒரு சிலர் வேலை மாற்றம் செய்வார்கள் அல்லது வேலையிலிருந்து தொழிலுக்கு மாறுவார்கள்.
தொழில் உத்தியோகத்தில் வேலைப் பளு மிகுதியாக இருக்கும். ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு, பாஸ் புக், ஆர்.சி. புக் போன்ற ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். உணவு கட்டுப்பாடு தேவை. மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க தியானம், மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.காரிய சித்திக்கு அஷ்டபுஜ துர்க்கையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406