மீனம் - வார பலன்கள்

இந்த வார ராசிப்பலன்

Published On 2023-03-19 17:49 IST   |   Update On 2023-03-19 17:49:00 IST

20.3.2023 முதல் 26.3.2023 வரை

சுப விரயம் ஏற்படும் வாரம். 6-ம் அதிபதி சூரியன் ராசியில் இருப்பதால் எந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வழக்குகள் சாதகமாகும். அடமானத்தில் இருக்கும் நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும்.

பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு.பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனங்கள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். 2-ம்மிடத்தில் சுக்ரன் ராகு சேர்க்கை திருமண முயற்சியில் சில தடை, தாமதங்கள் நிலவ வாய்ப்பு உள்ளது. வாடகை வீட்டு தொல்லை அகலும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள்.

சிலருக்கு சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். பூர்வீகச் சொத்து தொடர்பாக பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மூலம் சிறு மன உளைச்சல் உண்டாகும். சிலரின் தந்தை தொழிலுக்காக தூர தேசம் செல்லலாம். ஸ்ரீ கிருஷ்னரையும் ராதையையும் வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News