துலாம் ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். 'பழைய தொழிலைப் பைசல் செய்துவிட்டு, புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கூடுதலாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும் நேரம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. '10-ல் குரு பதவியில் மாற்றம்' என்பது ஜோதிடப் பொன்மொழி. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு திரவிய லாபங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு அழைப்புகள் வரலாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பயணங்கள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்று சிந்திப்பீர்கள். நல்ல சம்பவங்கள் நடைபெறும் நேரமிது. நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சி பலன் தரும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். செய்ய நினைத்த காரியத்தை செய்ய நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தனவரவும் திருப்தி தரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 12-க்கு அதிபதி புதன் 2-ல் வரும் இந்த நேரம் செலவிற்கு ஏற்ப வரவு வந்துசேரும். சேமிக்க இயலாது. முந்தைய சேமிப்பில் கொஞ்சம் கரையலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் உத்தியோக மாற்றம், வாகன மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறி தென்படும். எதிலும் யோசித்துச் செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி மாற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும். கலைஞர் களுக்கு நட்பு கைகொடுக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 25, 26, டிசம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.