துலாம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆவணி மாத ராசிபலன்

Published On 2025-08-18 08:04 IST   |   Update On 2025-08-18 08:05:00 IST

துலாம் ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். பொதுவாக 9-ம் இடம் பலம்பெறும்பொழுது பொன், பொருள் சேர்க்கை, பொருளாதார நிலையில் உயர்வு போன்றவை ஏற்படும். மேலும் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால், சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.

கடக - சுக்ரன்

ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாளாக துன்புறுத்தி வரும் நோய் அகலும். பிள்ளை களின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்த தடை அகலும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

சிம்ம - புதன்

ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும் வகையில் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பள உயர்வுடன் புதிய வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பர். சனி - சூரியன் பார்வை இருப்பதால் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்தி பலம் பார்த்து செயல்படுவது நல்லது. இந்த நேரத்தில் 'புத ஆதித்ய யோக'மும் நடைபெறுவதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

துலாம் - செவ்வாய்

ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு செவ்வாய் வருவது நல்ல நேரம்தான். தன - சப்தமாதிபதியாக விளங்கும் செவ்வாய், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். சொத்துக்களால் வந்த பிரச்சினை அகலும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.

சிம்ம - சுக்ரன்

ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வருவதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனதளவில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல்வாதியாக இருந்தால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு ஆதரவு கூடும். மாணவ-மாணவியர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் உயரும். இல்லம் தேடி நல்ல தகவல் வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 19, 20, 23, 24, 31, செப்டம்பர்: 1, 5, 6, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

Similar News