மேஷம் - வார பலன்கள்

வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை

Published On 2025-06-15 09:19 IST   |   Update On 2025-06-15 09:20:00 IST

15.6.2025 முதல் 21.6.2025 வரை

முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவுடன் சேர்க்கை பெறுகிறார். தான, தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பிரமிக்கத்தக்க வகையில் வாழ்வாதாரம் உயரும். நேர்மறை எண்ணங்களால் மனதில் நிம்மதி கூடும். பெயரும் புகழும் அதிகமாகும். நேர்மையும், கடுமையான உழைப்பும் உங்களை உயர்த்தி விடும்.

வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆரோக்கியம் சிறக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணத்தை சந்திக்க நேரும். பெண்கள் உடல் நலனை பராமரிக்க தியானம், யோகா மற்றும் இயற்கை உணவில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தந்தையால் நன்மைகள் கிடைக்கும். சிலர் கற்பனையில் எதையாவது நினைத்து மனசஞ்சலத்தை அதிகரிப்பார்கள். பங்குச் சந்தை காலை வாரலாம். காதல் விசயங்களால் மன உளைச்சல் அதிகரிக்கும். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News