வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
மேஷம்
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு 2,7-ம் அதிபதி சுக்ரன் பார்வை உள்ளது. லட்சியம் நிறைவேற சில கொள்கைகளை பின்பற்றுவீர்கள். தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ராசி அதிபதிக்கு குரு பார்வை இருப்பதால் புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும்.
தொழில் துறையில் புதிய முதலீடுகள் செய்ய இது உகந்த காலமாகும். தொழில் மூலம் நல்ல வருவானம் கிடைக்கும். சுயஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். திருமண தடை அகலும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும்.
20.11.2025 அன்று அதிகாலை 4.14 முதல் 22.11.2025 மாலை 4.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அமாவாசை அன்று சிவப்பு துவரை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406