வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை
11.1.2026 முதல் 17.1.2026 வரை
மேஷம்
எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் உச்சம் பெற்று ராசியை தனது 4ம் பார்வையால் பார்க்கிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதி கூடும். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். நீண்டநாளாக தீராத, தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.தலைமைப்பதவி தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும். விவேகமாக சிந்தித்து தொழிலை வளப்படுத்துவீர்கள்.
எதையும் எதிர்கொண்டு லாபகரமான நிலையை அடையப் போகிறீர்கள் தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் ஏற்படும். உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். 13.1.2026 அன்று மாலை 5.21 முதல்16.1.2026 மாலை 5.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.சிக்கனத்துடன் செயல்பட்டால் விரயங்களை தவிர்க்க முடியும். முருகனை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து வழிபட நினைத்தது நடக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406