வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை
14.12.2025 முதல் 20.12.2025 வரை
மேஷம்
தடைகள் விலகி மாற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும். உழைப்பிற்கு முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு.
நாணயம் நீடிக்கும். தாய், தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். விருந்தினர் வருகை வீட்டை கலகலப்பாக்கும். கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும்.மாமியார் மருமகள் பிணக்கு, தாய் மகள் கருத்து வேறுபாடு மறையும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.
அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நிலை மேம்படும். சுப விரயங்கள் மிகுதியாகும். 17.12.2025 அன்று காலை 10.26 மணி முதல் 19.12.2025 அன்று இரவு 10.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு இன்னல்களில் இருந்து உங்களை காக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406