வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை
21.12.2025 முதல் 27.12.2025 வரை
மேஷம்
தடைபட்ட அனைத்து இன்பங்களும் கூடி வரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ராசி அதிபதி செவ்வாயுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இது மேஷ ராசிக்கு பாக்கிய பலன்களை அதிகரித்துக் கொடுக்கக்கூடிய காலமாகும். திரிகோணங்கள் பலம் பெறுவதால் கசந்த காலங்கள் இனி வசந்த காலமாக மாறப்போகிறது.
அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும். எந்த நெருக்கடிகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உயர் கல்விக்கு விரும்பிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்யலாம். மாற்று முறை வைத்தியத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிள்ளைகள் பற்றிய நல்ல செய்திகள் தேடி வரும். நவகிரக செவ்வாயை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406