மேஷம் - வார பலன்கள்

வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை

Published On 2025-12-28 09:42 IST   |   Update On 2025-12-28 09:43:00 IST

28.12.2025 முதல் 3.1.2026 வரை

மேஷம்

சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் வாரம். ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும்.

தொழில் உத்தியோகத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நெருக்கடியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். சாமர்த்தியம் அதிகமாகும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிரகம் மன நிம்மதியை அதிகரிக்கும்.

மனதை மகிழ்விக்கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை, கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியில் இருந்து விடுதலை உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். நடராஜருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News