மேஷம் - வார பலன்கள்

வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

Published On 2025-11-30 10:19 IST   |   Update On 2025-11-30 10:20:00 IST

30.11.2025 முதல் 6.12.2025 வரை

மேஷம்

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசிக்கு 4-ம் மிடமான சுகஸ்தானத்தில் நிற்கும் அதிசார குரு பகவான் வக்ரகதியில் வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் தனவரவில் தன்னிறைவு உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் பாதிப்பு சற்று குறையும். எதிர்பாராத சில பண வரவுகள் இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலைகள் நிலவும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும். சுப மங்கள விசேஷங்கள் நடக்கும். புதிய தொழில் சிந்தனை அதிகரிக்கும். இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

சிக்கனத்தை கடைபிடித்தால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். மனக்கவலை மறந்து நிம்மதியாக தூங்குவீர்கள். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News