வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை
9.11.2025 முதல் 15.11.2025 வரை
மேஷம்
வெற்றி மேல் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் 3,6ம் அதிபதி புதனுடன் குரு பார்வையில் சஞ்சரிக்கிறார். தைரியம் வெற்றியைத் தரும். உடல் நலம் வைத்தியத்தில் சீராகும். கடன் பெற்று வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது பற்றி திட்டமிடுவீர்கள். பத்திரப் பதிவு சுமூகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும். இழப்புகளை ஈடுசெய்யக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிட்டும்.
சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நல்ல முறையில் நடக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். பெண்களுக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் மதிப்பு, மரியாதை உயரும். விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.வெற்றி மேல் வெற்றி உண்டாக விநாயகரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406