வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
மேஷம்
அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். இது விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும். கடன் தொல்லைகள் குறையும். சேமிப்பு உயரும். பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தை பெற்றுத்தரும்.
அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். வியாபார சூட்சுமங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். படித்து முடித்த இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிடம் வலிமையாக இயங்கினால் வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழல் உருவாகும். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். சஷ்டியன்று இளநீர் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406