வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை
2.11.2025 முதல் 8.11.2025 வரை
மேஷம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் 3,6ம் அதிபதி புதனுடன் இணைந்து உள்ளார். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.
கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். கணவன் மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயரும். 7ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். பவுர்ணமி அன்று திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406