மேஷம் - வார பலன்கள்

வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை

Published On 2025-08-24 10:38 IST   |   Update On 2025-08-24 10:39:00 IST

பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். தனஸ்தான அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும்.சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும்.

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். 30.8.2025 அன்று காலை 7.53-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். விநாயகருக்கு அவல், பொரி படைத்து வழிபடவும்.

Similar News