ஆன்மிக களஞ்சியம்
null

"ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்" தத்துவம்

Published On 2023-10-14 18:45 IST   |   Update On 2023-10-17 11:44:00 IST
  • அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
  • மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர்.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்.

பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.

இதனை, "ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்" தத்துவம் என்பார்கள்.

பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்து.

பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்று விடுவர்.

மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர்.

அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.

அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

அதாவது அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும்.

மற்ற நாட்களில் இவர் சந்நிதியை விட்டு வருவதில்லை.

Tags:    

Similar News