ஆன்மிக களஞ்சியம்
null

பிறவிப்பிணி நீக்கும் கிரிவலம்

Published On 2023-10-15 16:51 IST   |   Update On 2023-10-17 12:28:00 IST
  • கிரி வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிட்டும்.
  • இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும்.

அருணாச்சலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிட்டும்.

அதுமட்டுமா? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும்.

இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு.சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும்.

மூன்றடியில் தான பலன். நான்கடியில் அஷ்டாங்க யோக பலன்.

அதுமட்டுமா, வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும்.

இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும்.

மூன்றடிக்கு கோவில் கட்டிய பேறு கிடைக்கும்.

அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும்.

மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நானாவித பாவங்களும் காணாதொழியும்.

பாதத் துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும்.

கிரிவலம் வருவோரின் காலடித்தூசுபட்டு மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும்.

வலம் வருவோர் கயிலாய மலையை அடைந்தவுடன் அங்கே அவர்களுக்கு சந்திரன் வெண்ணிறக் குடை பிடிப்பான்.

சூரியன் தீபம் சுமப்பான். தருமதேவதை கைலாகு கொடுக்கும்.

நானாவித பூக்களை நடைபாதையில் தூவி இந்திரன் உபசரிப்பான்.

குபேரன் கைகளைக் கூப்பி சமீபம் வருவான். அஷ்ட வசுக்கள் மலர்மாரிப் பொழிவர்.

அப்சரஸ்கள் (ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை) ஆடிப்பாடி அணி செய்வார்கள்.

கங்காதேவியும், யமுனாதேவியும் சாமரம் வீசுவர்.

மேகங்கள் அமுதம் ஏந்தி வந்து தாகம் தீர்க்கும்.

திருமகள் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வருவாள்.

நான்கு வேதங்களும் நாவாரப் புகழ்ந்து வரும்.

Tags:    

Similar News