ஆன்மிக களஞ்சியம்

பஞ்சபூத விருட்ச அரசமர மேடை

Published On 2023-10-22 16:56 IST   |   Update On 2023-10-22 16:56:00 IST
  • இது ஐந்து மரங்கள் சேர்ந்த பஞ்ச விருட்ச கூட்டாகும்.
  • இந்த பஞ்ச விருட்சத்தை வழிபடுவோருக்கு ஆயுள் நீடிக்கும், பாவமும் வினையும் அற்றுவிடும்.

இந்த அரசமரத்து மேடையில் உள்ள மரம் பிரமாண்டமானது.

இதை பஞ்சபூத விருட்சம் எனலாம்.

இது ஐந்து மரங்கள் சேர்ந்த பஞ்ச விருட்ச கூட்டாகும்.

இதில் அரசு ஆல், வேம்பு, வக்கணை, நுணா ஆகியவைகள் ஒன்றாக சேர்ந்துள்ளன.

இந்த மரத்தின் கீழ் விநாயகப்பெருமான் மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் அருகில் நாக பிரதிஷ்டையுடனும் அமர்ந்திருக்கிறார்.

இந்த பஞ்ச விருட்சத்தை ஐந்து முறை சுற்றி யானை முகத்தனை ஐந்து கரத்தனை வழிபடுவோருக்கு

பஞ்சபூதமும் சுத்தி பெற்று தேகம் திடமாக ஆரோக்கியமாகி ஆயுள் நீடிக்கும்.

பாவமும் வினையும் அற்றுவிடும் என்ற ஐதீகம் உண்டு.

Tags:    

Similar News