ஆன்மிக களஞ்சியம்
null

நந்தியின் முன் எழுந்தருளும் அண்ணாமலையார்

Published On 2023-10-09 12:47 GMT   |   Update On 2023-10-17 10:15 GMT
  • மாட்டுப் பொங்கல் அன்று நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
  • கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும்.

மாட்டுப் பொங்கல் அன்று திருவண்ணாமலை கோவிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.

அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர்.

அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.

தனது வாகனத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும்.

முழு முதற்கடவுள் என்பதால் இவரை வணங்கி விட்டு சன்னதிக்குள் செல்வர்.

ஆனால் இங்கு முருகன் சன்னதி இருக்கிறது.

பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள்.

Tags:    

Similar News