ஆன்மிக களஞ்சியம்

மாங்காடு காமாட்சி கோவில்-மகா மண்டபம்

Published On 2023-09-24 17:33 IST   |   Update On 2023-09-24 17:33:00 IST
  • பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
  • இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

இத்தூண்களில் மயில் வாகனம், கொடிப்பெண், குந்துச்சிம்மன், சீரும்யாளி, யானை, யானை மீது சிம்மம் சண்டை செய்யும் காட்சி, தாமரை மலர் ஏந்தி நிற்கும் சூரியன், அழகிய அன்னம் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இம்மண்டபத் தூண்கள் கீழும் மேலும் நடுவிலும் சதுரமாக அமைந்து இடைப்பகுதி 16 பட்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முக மண்டபத்தூண்களும், பதினாறு (16) பட்டைகளுடன் அலங்கரிக்கின்றன.

இரண்டாம் திருச்சுற்று மிகப்பெரிய அளவில் அண்மைக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இப்பிரகாரத்தின் வடதிசை வாயிலில் பெரிய கோபுரம் உயர்ந்த நிலையில் ஏழு நிலைகளை உடைய கோபுரமாக அமைந்து காட்சி அளிக்கிறது.

பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.

Tags:    

Similar News