ஆன்மிக களஞ்சியம்

ஆடி, புரட்டாசி, தை அமாவாசை வழிபாடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Published On 2023-07-21 05:38 GMT   |   Update On 2023-07-21 05:38 GMT
  • உடல் நிலை பாதிப்புகளில் இருந்து விரைவில் நலம் பெரும் அமைப்பு
  • புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்கும் யோகம்

இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் , தமது இரண்டாவது தாயான குல தெய்வத்தை ஒருவர் முறையாக அன்ன தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு, அறிவில் தெளிவு, நல்லவர் சேர்க்கை, செய்யும் தொழில் முன்னேற்றம், வருவாய் உயர்வு, பதவி உயர்வு, மக்கள் செல்வாக்கு , பூர்விகத்தில் ஜீவிக்கும் தன்மை அதனால் ஜாதகர் அடையும் நன்மை, தமது குளம் விளங்க நல்ல வாரிசு, பெரிய மனிதர்களின் நட்பு, ஜாதக ரீதியான பாதிப்புகளில் இருந்து நன்மை பெறும் யோகம், வண்டி வாகனங்களில் இருந்து எவ்வித பாதிப்பும் விபத்தும் ஏற்படாத அமைப்பு , தனது சொந்த பந்தங்களுடன் நல்ல முறையில் உறவை வளர்த்துகொண்டு நன்மை பெரும் தன்மை .

கணவன் -மனைவி அன்பு ஒற்றுமை , பிரிந்த கணவன் -மனைவி சேர்ந்து தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் பெரும் யோகம், உடல் நிலை பாதிப்புகளில் இருந்து விரைவில் நலம் பெரும் அமைப்பு, செய்யும் தொழில் அபரிவிதமான முன்னேற்றம், புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்கும் யோகம், வருடம் முழுவதும் எவ்வித சிக்கல்களும் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் யோக அமைப்பு, மன கவலைகளில் இருந்து ஜாதகரை மீட்டு எடுத்து நலம் பெற செய்யும் யோகம் , மண் மனை வண்டி வாகன யோகம், புதிதாக தொழில் துவங்கும் யோகம், புதிய வீடு கட்டும் யோகம் என அனைத்து நன்மைகளையும் ஒருவருக்கு இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை குலதெய்வ வழிபாடு செய்வதால் கிடைக்க பெறுவார் .

இதற்கு ஜாதகர் தனது குல தெய்வம் எதுவோ அங்கு சென்று , அவர்களது முறைப்படி வழிபாடு செய்து, அங்கு உள்ள முன் பின் அறியாத நபர்களுக்கு ஒரு 20 பேருக்காவது அன்னதானம் செய்து வழிபடுவது மிக பெரிய நன்மைகளை நிச்சயம் தரும் . குலதெய்வத்தை அறியாதவர்கள் தனது இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து நலம் பெறலாம் .

பித்ரு தர்ப்பணம்

ஒருவருடைய ஜாதக அமைப்பில் பித்ரு தோஷங்களால் , வறுமை , நோய் , கடன் , விபத்து , ஏமாற்றம் , திருமண தாமதம், கணவன் மனைவி பிரிவு , விவாகரத்து ,குழந்தை இன்மை , விஷ ஜந்துக்களால் பாதிப்பு , மன நிம்மதி இழப்பு , விரக்தி, வேலை இன்மை , தொழில் முன்னேற்றம் இன்மை , மற்றவர்களால் ஏமாற்ற படுதல் , திடீர் இழப்பு ,எதிரிகள் தொந்தரவு , யோகம் அற்ற நிலை , யோக பங்கம் ஏற்படுதல் , அவ பெயர் , தீய பெண்களின் சகவாசம் இதனால் பொருள் இழப்பு , கெட்ட நண்பர்களால் துன்பம் , மற்றவருக்காக தான் பாதிக்க படுதல் என ஜாதகரை படுத்தி எடுத்து விடும் இந்த பித்ரு தோஷம்.

இதுமாதிரியான பாதிப்புகளால் அதிகம் துன்புறுவோர் அனைவரும், முறை படி நதிக்கரை , மீன் உள்ள நீர் நிலைகளுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் சென்று தமது சக்திக்கு ஏற்றார் போல் தாமாகவோ , அல்லது வேதம் அறிந்த பிராமணர் வழிகாட்டுதலின் பேரிலோ சுவேதா தேவியின் மூலம் தர்ப்பணம் செய்வோருக்கு மேற்கண்ட பாதிப்புகளில் இருந்து 100 சதவிகிதம் நன்மை நடைபெற ஆரம்பிக்கும் சில நாட்களிலேயே இது கண்கூடாக கண்ட உண்மை .

மேலும் இந்த ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வோருக்கு கடந்த 54 வருடமாக பித்ரு கடமையை செய்யாதவருக்கு பித்ருக்கள் ஏற்றுக்கொண்டு நன்மைகளையும் , யோகங்களையும் வழங்குவார்கள்.

Tags:    

Similar News